சோமாலியாவில் இறக்கும் அபாயத்தில் 20 ஆயிரம் குழந்தைகள்

0
252

கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி செய்தியொன்று வெளியாகியுள்ளது.

Related image

சோமாலியாவில் சேவ் த சில்ரன் என்ற அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வொன்றிலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.

சோமாலியாவில் ஒன்பது மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

Related image

உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்க சர்வதேச சமூகத்தை சேவ் தி சில்ட்ரன் கோரியுள்ளது.

நாட்டில் கடுமையான வறட்சியின் காரணமாக தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பு தெரிவித்த அடுத்த சில தினங்களில் இந்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here