போர்த்துக்கல்லில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 62 பேர் பலி

0
219

போர்த்துக்கல்லில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ விபத்தில் சிக்கி 62 பேர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில் கடும் வெப்பம் நிலவுகிறது. 104 பாகை செல்சியஸ்; வெப்பநிலை காரணமாக அங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கடுமையான வெப்பக்காற்று வீசுவதால் அங்குள்ள 60 க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பகுதியில் தீ அணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போர்ச்சுகலின் மத்திய பகுதியில் உள்ள பெட்ரோகா கிரேண்டே என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் போது வனப்பகுதியில் உள்ள பிரதான பாதையின் ஊடாக வாகனத்தில் பயணித்தவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.

இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வாகன சாரதிகள் காரில் இருந்தபடியே தீ யில் சிக்கி பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

60-க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 1700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதியை அண்மித்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தீயில் சிக்கி கொண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகலுக்கு உதவ, நெருப்பை அணைக்கும் இரண்டு விமானங்களை ஸ்பெயின் அனுப்பியுள்ளது.

அண்மைக்காலங்களில் போர்த்துக்கல்லில் ஏற்பட்ட மிகப்பெரும் சோக சம்பவம் இது என போர்த்துக்கல்லில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here