மனித கழிவை கைதிகளுக்கு உண்ண கொடுத்த வெனிசுலா அதிகாரிகள்

0
253
Government protestors in Caracas, Venezuela, are sprayed by a national guard water canon May 29. (CNS photo/Mauricio Duenas, EPA)

வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ பதவிவிலக வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் நாடு முழுவதிலும் இருந்தும் இதுவரை 3000 பேர் கைதாகியுள்ளனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர்கள் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் கடுமையாக தாக்கி சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் உணவில் மனித கழிவுகளை கலந்து சாப்பிட வற்புறுத்தியுள்ளனர். சாப்பிட மறுத்தவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக அதனை திணித்துள்ளனர். சிலர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பயந்து அதனை சாப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் இந்த செய்கை மனித உரிமைகள் ஆர்வலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here