மாணவி அடித்துக் கொலை: கனடாவில் சம்பவம்

0
126

கானடாவின் டொராண்டோ பகுதியில் 17 வயதுடைய நப்ரா ஹுசைன் என்ற முஸ்லிம் மாணவி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி பள்ளிவாசலில் இருந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பேஸ் போலால் பலமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய மார்டின் டொரஸ் எனும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசார் இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இந்த கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here