குழந்தையை கடத்தி விற்க முயன்ற கும்பல் டெல்லியில் கைது

0
132

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குழந்தைகளை கடத்தி குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றை இரண்டரை வயது குழந்தை ஒன்றுடன் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை மீட்கப்பட்ட போது

கடந்த 5 ஆம் திகதி டெல்லியில் உள்ள ஆரிப் என்பவரின் இரண்டரை வயது மகன் காணாமல் போயிருந்தார். இந்த தகவல் வாட்ஸ்அப் இன் மூலம் பரவிய போது காணாமல் போன குழந்தை கூர்கானில் உள்ளதாகவும் இரண்டரை இலட்சம் ரூபாக்கு விற்கப்பட உள்ளதாகவும் ஒரு பெண்மணி வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் இதில் சம்பந்தப்பட்ட கும்பல் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here