கட்டார் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் வாபஸ் , 6 புதிய கொள்கைகளை ஏற்க கோரிக்கை!

0
157
Qatar Enforced To Implement New Policies Not 13 Conditions

Qatar Enforced To Implement New Policies Not 13 Conditions

கடந்த மாதம் கட்டார் மீது அரபு நாடுகள் முன்வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தபோவதில்லை என சவூதி அரேபியாவை தலைமையாக கொண்ட 4 அரபு நாடுகளும் தெரிவித்துள்ளன.

கட்டார் நாடானது தீவிரவாத செயற்பாடுகளுக்கு துணை போவதாக கருதி அரபு நாடுகளின் ஒன்றியம் கட்டார் மீது தடைகளை விதித்து தடை நீக்கத்துக்கு 13 நிபந்தனைகளை அடங்கிய பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் அனைத்து வலையமைப்பினையும் நிறுத்துவது, துருக்கி ராணுவ தளத்தினை மூடுவது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான தொடர்பை முறித்துக்கொள்வது, இரானுடனான உறவுகளைக் குறைப்பது என பல விடயங்கள் உள்ளடக்கப்ப்டிருந்தது.

எனினும் இந்த நிபந்தனைகள் கட்டாரின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்குறது என கருதி கட்டார் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

Image result for qatar

அரபு நாடுகளின் தடையால் மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டார் இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், வான் மற்றும் கடல் வழியாக 2.7 மில்லியன் மக்களுக்கான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனை அடுத்து நியோர்க்கில் கூடிய அரபு நாடுகளின் இராஜதந்திர அலுவலர்கள் இந்த நெருக்கடியை சுமுகமாக பேசி தீர்க்கவிரும்புவதாக தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ள அரபு நாடுகளின் இராஜதந்திர அலுவலர்கள் , கட்டார் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என மேலும் மேலும் வலியுருத்தப்போவதில்லை. அதற்கு பதிலாக கட்டார் ஆறு புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கொள்கையில் , தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக பேரிடுதல், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் அளிக்க மறுப்பது, வெறுப்பு, வன்முறையினை தூண்டுவதை நிறுத்துதல் மற்றும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அனுசரணையுடன் நடைபெறும் இந்த சமரச முயற்சிகளை கட்டார் தனக்கு சாதகமாக்கி கொள்ளவேண்டும் என உலக அரங்கில் பல தரப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பிற செய்திகள் 

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யும் சீனா!

ஐஎஸ் தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் படைகள்

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here