26 ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுதலையாகிறார் பேரறிவாளன்!

0
150
Tamil Nadu Government Grant 30 Days Parol Perarivalan

Tamil Nadu Government Grant 30 Days Parol Perarivalan

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் பிணையில் ஜெயிலில் இருந்து வெளியே வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Image result for பேரறிவாளன்

 

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பிணையில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பேரறிவாளன் பிணையில் வெளியே வர இன்று, அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு பேரறிவாளன் தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனக்கு வரவில்லை. என் மகனை காண 26 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஒரு மாத காலம் பிணை கேட்டிருந்தேன். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி”, என கூறினார்.

Image result for பேரறிவாளன்

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் 7 பேரும் தண்டனை காலம் முடிந்தும் 26 ஆண்டுகளாக சிறையிலேயே விடுவிக்கப்படாமல் உள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நல குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மகனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தகதாகும்.

பிற செய்திகள்

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here