தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

0
161
Neet Exam Failure Tamil Nadu Student Anitha Suicide

Neet Exam Failure Tamil Nadu Student Anitha Suicide

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து அது தோல்வியில் முடிவடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனித்தாவின் மரணம் தமிழகத்தில் உணர்வலைகளை கிளறிவிட்டுள்ளது.

Image result for anitha suicide

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் அனிதா என்பவர் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7 ஆகும். மருத்துவம் படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தன் இலட்சியம் என்று கூறியிருந்தார்.

மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு, நீட் தேர்வில் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனித்தா அந்த வழக்கு தோல்வியில் முடிய மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

அனித்தாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என கூறி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடந்தது. சாலைமறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், குழுமூர் கிராம மக்களுடன் சேர்ந்து குழுமூர்-செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்தனர்.

அதுமட்டுமன்றி மாபெரும் போராட்டம் நடத்த மாணவ-மாணவிகள் பெருந்திரளாக மெரினா கடற்கரையில் குவிய வேண்டும் என்று ‘வாட்ஸ்-அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளை அடுத்து மெரினா கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் யாரும் நுழைந்துவிடாத வகையில் மெரினா கடற்கரை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அனித்தாவின் மரணம் தொடர்பில் பல முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல்களையும் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

அனித்தாவுக்காக அனைவரும் போராட தயாராகுங்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வழமையாக சமுக பிரச்சனைகளில் வாயே திறக்காத நடிகர் ரஜனிகாந்த் என் மனது வலியில் தாங்கதுயரத்தில் ஆழ்ந்துள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இந்த மரணம் தொடர்பில் உணர்ச்சிகரமான ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்படத்தக்கது.

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here