வட கொரியா ஏவுகணை சோதனைகள் – ஒரு பரந்த பார்வை

0
133
North Korea Continues Ballistic Missile Tests Over UN Warning

(North Korea Continues Ballistic Missile Tests Over UN Warning)

தடைகளை மீறி, வட கொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை ஜப்பான் வான் பரப்பில் ஏவியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசுகள் தெரிவித்துள்ளன.

வட கொரிய ஏவுகணை (கோப்புப் படம் )

அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்திருக்கலாம் என்றும், 3,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கலாம் என்றும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பசிஃபிக் பெருங்கடலில் சென்று விழுவதற்கு முன்பு, அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேல் உள்ள வான்வெளியில் பறந்துள்ளது.

கடந்த மாதம் இதே போன்று வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் வான்வெளியைக் கடந்து சென்றதை ‘முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்’ என்று ஜப்பான் கூறியிருந்தது.

இந்த ஏவுகணை உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கும் சற்று முன்னதாக ஏவப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29 அன்று ஏவப்பட்ட ஏவுகணையை விட, இந்த ஏவுகணை அதிக உயரத்தில் பறந்ததுடன் மட்டுமல்லாது அதிக தூரமும் பயணித்துள்ளது. சுமார் 550 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்த முந்தைய ஏவுகணை 2,700 கிலோ மீட்டர் தூரம் வானில் பறந்து சென்று கடலில் விழுந்தது.

சமீபத்திய வட கொரிய ஏவுகணை பறந்து சென்ற தடம் ஜப்பானில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

இது, வட கொரியா ஆறாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியத்தைத் தொடர்ந்து, ஐ.நா அந்நாடு மீது தடைகள் விதித்ததன் பின்னர் வட கொரியா மேற்கொள்ளும் முதல் ஏவுகணை சோதனையாகும்.

வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து 3,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, அமெரிக்காவின் பசிஃபிக் பிராந்தியமான குவாம் தீவை தாக்குவதற்கு இந்த ஏவுகணையின் தூரம் போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சோதனை, ஜப்பானைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள ‘பொறுத்துக்கொள்ள முடியாத’ நிகழ்வு என்று அந்நாட்டு அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா கூறியுள்ளார்.

தங்கள் நாடு மேற்கொண்டு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளும் என்று ஏற்கனவே வட கொரியா கூறியிருந்தது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் தாக்குவதற்கு தயார் நிலையில் உள்ள அணு ஆயுதத்தை சோதனை நடத்தியதாக வட கொரியா கூறியிருந்தது

ஐ.நா விதித்துள்ள தடைகளைத் தொடர்ந்து, ஜப்பானை மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவை சாம்பலாகப்போவதாகவும் வியாழனன்று வட கொரியா மிரட்டல் விடுத்திருந்தது.

வட கொரியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ‘கிழக்கு கடல்’ என்று அழைக்கப்படும் ஜப்பான் கடலில் கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கான பயிற்சியை நடத்திய தென் கொரியா, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தையும் கூட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று, வெள்ளிக்கிழமை, அவசரமாக கூடவுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய, அணு குண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததாக வட கொரியா கூறியிருந்தது.

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here