மெக்சிகோவில் பயங்கர நிலஅதிர்வு! கட்டடங்கள் நொறுங்கியது! 140 பேர் பலி!

0
96
Mexico Latest Powerful Earthquake 140 People Killed

(Mexico Latest Powerful Earthquake 140 People Killed)

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அங்கு பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 140 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.

நேற்று அந்நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிலஅதிர்வு பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டது. நிகழ்வு நடந்து சிறிது நேரத்தில் இந்த பேரழிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தகது.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மெக்சிகோவில் இடம்பெற்ற நில அதிர்வில் 90 பேர் வரையில் பலியாகியிருந்தனர். அந்த சோகம் முடிவதற்குள் அடுத்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை அங்கு பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உண்டுபண்ணியுள்ளது.

 

பிற செய்திகள்

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

தமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை! ஆங்காங்கே வெடிக்கும் போராட்டங்கள்!

மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here