பிரான்ஸில் அமுலுக்கு வருகிறது புதிய பயங்கரவாத தடைச்சட்டம்!

0
148
France Parliament Implement New Law Control Terrorism

(France Parliament Implement New Law Control Terrorism)

ஐரோப்பாவில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கும் முகமாக பல நாடுகள் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.

பிரான்ஸ் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற தொடங்கிய காலம் முதல் அமுலில் இருக்கும் அவசரகால நிலைக்கு பதிலாக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பிரான்ஸில் சுமார் இரண்டாண்டு காலமாக அமலில் இருந்த அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றிற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.

France Parliament Implement New Law Control Terrorism

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி பாரிஸில், ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து, ஃபிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதுவரை ஆறு முறை அவசரகால நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக அவசரகால நிலையை நீடித்தால் ஜனநாயக பண்புகள் கேள்விக்குரியதாகிவிடும் என்னும் காரணத்தால் அதற்கு பதிலாக புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் ஒன்றாம் தேதி சமீபத்தில் பிரான்ஸில் நீட்டிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு வரும் நிலையில், அதற்கு முன்பாக இந்த மசோதா சட்டமாக இயற்றப்படும் என் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய தடைச்சட்டத்துக்கு 415 உறுப்பினர்கள் ஆதரவும், 127 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 19 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

பிரான்சின் மனித உரிமை குழுக்கள் இந்த புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here