லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு: குற்றவாளியின் தந்தை யார் என்று தெரியுமா?

0
140
Las Vegas Gunman Father FBI Wanted Criminal

(Las Vegas Gunman Father FBI Wanted Criminal)

லாஸ் வேகாஸ் களியாட்ட விடுதிகள் அடங்கிய பகுதியில் இயந்திர துப்பாக்கியால் ஈவிரக்கம் இல்லாமல் பலரை சுட்டு கொன்ற ஸ்டீஃபன் பேடாக்கினுடைய தந்தையும் ஒரு தேடப்பட்டு வந்த குற்றவாளி என அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBI தேடும் குற்றவாளியாக இவனின் தந்தை பெஞ்சமின் ஹோஸ்கின்ஸ் பேடாக் இருந்துள்ளார்.

அதேவேளை பெஞ்சமின் ஹோஸ்கின்ஸ் பேடாக் இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றிய வீரர் என்றும் அறியப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அரிசோனா , பீனிக்ஸ் போன்ற இடங்களில் 1960 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தொடர் வங்கி கொள்ளை சம்பவங்களில் பெஞ்சமின் தொடர்புபட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட அந்த வருட பிற்பகுதியில் கைதாகி சிறை வைக்கப்பட்டார்.

பின்னர் தற்போது லாஸ் வேகாஸ் கொலைகளை புரிந்த ஸ்டீஃபன் பேடாக்கிற்கு பத்து வயதாக இருக்கும் போது 1969 ஆம் ஆண்டளவில் சிறையில் இருந்து தப்பியோடியுள்ளார் பெஞ்சமின்.

1969 தொடக்கம் 1977 வரையான காலப்பகுதியில் பொலிசாரால் தேடப்பட்ட முதல் பத்து குற்றவாளிகளில் பெஞ்சமினும் ஒருவராவார்.

பெஞ்சமின் தனது 34 ஆவது வயதில் 165 ,000 டாலரை களவாடியுள்ளமை குற்றமாக பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இதன் பின்னர் பல வருடங்கள் கழித்து 1998 ஆம் ஆண்டளவில் பெஞ்சமின் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லாஸ் வேகாஸ் கொலையாளியின் குடும்ப பின்னணியில் குற்றசாட்டுக்கள் அடங்கியிருப்பது தொடர்பில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here