திங்கட்கிழமை கட்டலோனியா தனி நாடு உதயமாகுமா?

0
125
Catalonia New Country Declare Monday

(Catalonia New Country Declare Monday)

ஸ்பெயின் நாட்டில் இருந்து தனி நாடாக பிரிவது தொடர்பான அறிவித்தலை கட்டலோனியா வருகின்ற திங்கட்கிழமை வெளியிடவுள்ளது.

ஸ்பெயினின் தனி மாகாணமான கட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை சமீபத்தில் நடத்தியது.

இதில் 90 சதவிகிதம் பேர் தனி நாடாக கட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Catalonia New Country Declare Monday

எனினும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கட்டலோனியா மக்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தன்னாட்சி பெற்ற மாகாணமாக உள்ள கட்டலோனியா தனிநாடாக பிரிவது அவசியமற்றது எனவும் தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பில் கட்டலோனியா தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

90 சதவிகித மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் தனிநாடாக அறிவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கூறியுள்ளனர்.

அதன்படி ஸ்பெயின் நாட்டில் இருந்து கட்டலோனியா பிரிவதை வருகின்ற திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக கட்டலோனியா தலைவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கட்டலோனியா நாடாளுமன்றம் திங்களன்று கூடுவதை ஸ்பெய்னின் அரசியல் சாசன நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. கட்டலோனியா சுதந்திர பிரகடனம் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த இழுபறிகளின் மத்தியில் புதிய நாடாக கட்டலோனியா உதயமாகுமா என்னும் எதிர்பார்ப்பு உலகளாவிய ரீதியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

முப்பது பேரை கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட ரஷ்ய தம்பதிகள்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

 

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here