பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி!

0
124
Pakistan Terrorists Attack Five Shiite Muslims

(Pakistan Terrorists Attack Five Shiite Muslims)

பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கே ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்துவந்த குடியேறிகள் வசிக்கும் பகுதியில் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

தென்மேற்கே பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா அருகே வசித்து வரும் இந்த மக்கள் ஹாஸாரா இனத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வன்முறைக்கு பயந்து தப்பி வந்தவர்கள்.

இவர்களில் பலர் அருகாமையில் உள்ள சந்தைப் பகுதியில் வியாபாரம் செய்வதற்காக ஒரு வேனில் நேற்று காய்கறிகளை ஏற்றிச்சென்ற சமயம் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த தீவிரவாதிகள் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே ஐவரும் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஹஸாரா இனத்தவர்கள், சன்னி முஸ்லிம்கள் மீது தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பரவலாக தாக்குதல் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here