கட்டலோனியா தனி நாட்டு பிரகடனம் ஒத்திவைப்பு!

0
140
Catalonia Leader Puigdemont Suspended Independence Declaration

(Catalonia Leader Puigdemont Suspended Independence Declaration)

ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாக கட்டலோனியா பிரிவதை அறிவிக்கும் நாளை கட்டலோனியா தலைவர் ஒத்தி வைத்துள்ளார்.

ஸ்பெயினின் தனி மாகாணமாக விளங்கி வரும் கட்டலோனியா தனி நாடாக பிரிய பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையானவர்கள் தனி நாடாக பிரிவதற்கு விருப்பம் அளித்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பை கட்டலோனியா தலைவர் நேற்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Catalonia Leader Puigdemont Suspended Independence Declaration

ஸ்பெயின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை சாத்தியப்படுத்தும் வகையில் விடுதலைப் பிரகடனத்தை செயல்படுத்துவது நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

நடாத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் காரணமாக கேட்டலோனியா விடுதலை பெறுவதற்கான உரிமையைப் பெற்றதாக செவ்வாய்க்கிழமை கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் பேசிய தலைவர் பூஜ்டியமோன் தெரிவித்தார்.

அதே நேரம் தாம் இந்த விஷயத்தில் பதற்றத்தைத் தனிக்க விரும்புவதாகவும் பூஜ்டியமோன் தனது உரையில் கூறியுள்ளார்.

பிரிவினைக்கான ஆதரவு பெரும்பான்மையாக இருந்தாலும், ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பெரும்பாலானோர் இதற்கு எதிராகவே உள்ளனர்.

எழுந்துள்ள சில எதிர்ப்புகள் மற்றும் சிக்கல்களை சுமுகமாக தீர்க்கும் நோக்கத்திலேயே இந்த விடுதலைப் பிரகடனத்தை செயல்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக பூஜ்டியமோன் அறிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here