பத்து வயது சிறுமி கர்ப்பம்! இதெல்லாம் ஒரு தாய் மாமன் பார்க்குற வேலையா?

0
194
Ten Years Child Became Pregnant Relatives Arrested

(Ten Years Child Became Pregnant Relatives Arrested)

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஒரு பத்து வயது சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த சிறுமியின் அடிவயிற்றில் வலி என கூறி சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தபோதே இந்த அதிர்ச்சி தரும் விடயத்தை வைத்தியர்கள் கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் , தனது தாய் மாமன் தன்னிடம் பாலியல் ரீதியில் பலாத்காரமாக நடந்து கொண்டதை அந்த சிறுமி கூறினார்.

இதனையடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு மரபணு சோதனைகள் செய்து முடிக்கப்பட்டது. ஆனால் இந்த சோதனைகளில் அவரது மரபணு மாதிரி குழந்தையின் மரபணு மாதிரியோடு ஒத்துப் போகாததை அடுத்து அவர் கர்ப்பத்துக்குக் காரணமில்லை என்பது கண்டறியப்பட்டது.

Ten Years Child Became Pregnant Relatives Arrested

இரண்டாவது நபர் , முதலில் கைது செய்யப்பட்டவரின் தம்பி என வெளியாகிய தகவலின் பேரில் அவரும் கைது செய்யப்பட்டு அவரது மரபணு மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரே கர்ப்பத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டார்.

எனினும் , முதல் நபரும் சிறுமியுடன் பாலியல் முறைகேடுகளை புரிந்தவர் என சிறுமி கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தின் வழக்கு விசாரணை நேற்று செவ்வாய் கிழமை நீதிமன்றில் இடம்பெற்றது

சிறுமியின் கருவைக் கலைப்பது அவரது உயிருக்கே ஆபத்தாகலாம் என்று டாக்டர்கள் கூறிய பிறகு, அவருக்கு கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டது.

அந்த சிறுமிக்கு அவர் கருவுற்றிருப்பதே தெரிவிக்கப்படவில்லை. வயிற்றில் கல் இருப்பதால் அவரது வயிறு பெருத்திருப்பதாக அவருக்கு கூறப்பட்டது.

இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here