மெக்சிகோ சிறையில் கலவரம்-13 பேர் பலி!

0
116
Mexico Prison Gang Violence Leaves 13 People Dead

(Mexico Prison Gang Violence Leaves 13 Dead)

மெக்சிகோ நாட்டில் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியுள்ளது.

அந்நாட்டில் பெரும்பாலான சிறைச்சாலைகள் முறையான வசதிகள் அற்ற நிலையில் , அளவுக்கதிகமான கைதிகளை கொண்டதாக அமைந்துள்ளன.

பல சிறைகள் போதுமான படுக்கை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் மாட்டு கொட்டில்களுக்கு இணையாக உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் இங்குள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் நுய்வோ லியோன் மாநிலத்திற்குட்பட்ட மான்டெர்ரி நகரில் உள்ள கேடரெய்ட்டா சிறையில் நேற்று முன்தினம் இரவு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை முற்றி கலவரமாக உருவெடுத்தது. இதில் ஒரு கைதி கொல்லப்பட்டார். சிறை அதிகாரிகளை கைதிகள் சிறைபிடித்தனர்.

இதனையடுத்து குறித்த சிறைச்சாலைக்கு மேலதிக பாதுகாப்பு படைகள் அனுப்பபட்டு கைதிகளை அடக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

Mexico Prison Gang Violence Leaves 13 People Dead

விடியவிடிய தொடர்ந்த கலவரத்தை கட்டுப்படுத்தவும், சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகளை மீட்கவும் மாலை 5 மணியளவில் ஆயுத பிரயோகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்போது பாதுகாப்பு படைகளின் துப்பாக்கிச் சூட்டிலும், கைதிகளுக்கு இடையிலான மோதல்களிலும் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தில் சுமார் 250 கைதிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here