போலிஸ் தலைமையகம் மீது சிரியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல்!

0
177
Syrian Police Headquarters ISIS Suicide Bomb Attack

(Syrian Police Headquarters ISIS Suicide Bomb Attack)

சிரியாவில் போலிஸ் பாதுகாப்பு தலைமையகம் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சிரியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்ட பின்னர் இவ்வாறன தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் , சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் இரண்டு தீவிரவாதிகள் நுழைய முயன்றுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய வேளை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை முன்னதாகவே வெடிக்கச் செய்தனர்.

Image result for Suicide attack targets police HQ in Damascus

இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Syrian Police Headquarters ISIS Suicide Bomb Attack

அப்போது தலைமையகத்தின் பின்புறம் ஒரு தீவிரவாதி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவனும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.

இந்த தற்கொலை வெடிப்பு சம்பவங்களை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பிரதேசம் முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது.

தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 2 பேர் பலியானதாகவும், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here