ஐந்தாண்டுகளின் பின் தலிபான் பிடியில் இருந்து மீண்ட அமெரிக்க குடும்பம்!

0
114
American Family Released From Taliban After 5 Years

(American Family Released From Taliban After 5 Years)

கடந்த ஐந்து ஆண்டுகளாக தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அமெரிக்க குடும்பம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

வட அமெரிக்காவை சேர்ந்த ஐந்துபேர் கொண்ட இந்த குடும்பத்தை 2012 ஆம் ஆண்டு தொடக்கம் தலிபான்கள் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

2012 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் பயணம் மேற்கொண்டிருந்த போது, கனடாவை சேர்ந்த ஜோஷுவா போயில் மற்றும் அவரது அமெரிக்க மனைவி கெய்ட்லன் கோல்மேன் ஆகியோர் தாலிபன்களால் கடத்தப்பட்டனர்.

American Family Released From Taliban After 5 Years

இதன் பின்னர் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. இவர்கள் ஐவருமே தலிபான்களின் பிடியில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் அமெரிக்க இராணுவம் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த சமயம் ,அவர்கள் கொடுத்த ரகசிய தகவலையடுத்து குடும்பத்தினர் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் இது ஒரு நம்பிக்கையளிக்கும் தருணம் என கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த தம்பதிகளை விடுவிக்க தலிபான் தரப்பைச் சேர்ந்த மூவரை விடுவிக்குமாறு தலிபான்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here