அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு கணணி திருட்டால் அச்சுறுத்தல்!

0
160
Computer Hackers Steals Australia Government Security Data

(Computer Hackers Steals Australia Government Security Data)

அவுஸ்திரேலியா நாட்டின் முக்கிய பாதுகாப்பு விடயங்களை கணணி திருட்டின் மூலம் மர்ம நபர்கள் சிலர் கைப்பெற்றியுள்ளனர்.

இந்த ஊடுருவலின்போது, அரசாங்க ஆயுத கொள்வனவுக்கான ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில், புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும்.

இந்தத் தகவல்கள் வர்த்தக ரீதியிலாக மிக முக்கியமானவை என்றும், ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Computer Hackers Steals Australia Government Security Data

இந்த தகவல் திருட்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என அவுஸ்திரேலிய பாதுகாப்பு தொழில் அமைச்சர் கிரிஸ்டோஃபர் பைன் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தாலும் திருடப்பட்ட தகவல்கள் தொடர்பில் சரியான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த கணணி திருட்டை மேற்கொண்ட நபர் அல்லது குழு யாரென தெரியவில்லை. ஆனால் கணினியில் ஊடுருவிய மர்ம நபருக்கு அவுஸ்திரேலிய கணினி பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஆல்ஃப்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த தகவல் திருட்டு சம்பவத்தில் பிற நாடுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடக்கம் இணைய திருட்டுக்கள் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here