லைபீரியா அதிபர் தேர்தலில் உதைபந்தாட்ட வீரர் ஜார்ஜ் வேக் முன்னணியில்!

0
151
Liberia Presidential Election Football Star Weah Leads

(Liberia Presidential Election Football Star Weah Leads)

ஆபிரிக்க நாடான லைபீரியாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் பொது தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பொது தேர்தலின் வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம் அந்நாட்டின் புகழ்பூத்த முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேக் இதுவரை முன்னிலையில் உள்ளார்.

Liberia Presidential Election Football Star Weah Leads

இந்த ஆண்டுக்கான தேர்தலில் தற்போதைய துணை அதிபர் ஜோசப் போகாய் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேக் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்குபதிவு முடிந்ததும் நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளில் முன்னால் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேக் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

Image result for Liberia Presidential Election Football Star Weah Leads

இந்த தகவல் லைபீரியா நாட்டின் தேர்தல் ஆணையகம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

லைபீரியா நாட்டின் தேர்தல் சட்டவிதிகளின் பிரகாரம் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதம் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2-வது கட்ட வாக்குபதிவு வருகிற நவம்பர் மாதம் நடைபெறும்.

இந்த வாக்கெடுப்பு பற்றிய உத்தியோகபூர்வ முடிவுகள் வருகின்ற 25 ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தேர்தலில் பெரிய அளவிலான வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தலை கண்காணிக்கும் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் NDI என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு! கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு!

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here