எகிப்தில் தீவிரவாதிகள்-இராணுவம் மோதல் ! 30 பேர் பலி

0
114
Egypt ISIS Terrorists-Security Forces Fight 30 Killed

(Egypt ISIS Terrorists-Security Forces Fight 30 Killed)

மத்திய கிழக்கு நாடாகிய எகிப்தில் பாதுகாப்பு படைகள் மற்றும் தீவிரவாதிகள் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் எகிப்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

திடீர் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் தீவிரவாதிகள் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை பெருமளவில் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சினாய் தீபகற்பம் பகுதிக்கு உட்பட்ட ஷேக் சுவேத் நகரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளின்மீது நேற்று 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதில் ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர்.

பதிலுக்கு இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில், 24 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Image result for 24 militants, 6 soldiers killed in attacks in Egypt's Sinai

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here