ஆஸ்திரிய நாட்டின் தலைவராகும் 31 வயது இளைஞன்!

0
148
Sebastian Kurz Elected Austria First Young Europe President

(Sebastian Kurz Elected Austria First Young Europe President)

ஆஸ்திரியாவின் அதிபர் தேர்தலுக்கான பொதுவாக்கெடுப்பு முடிவடைந்துள்ள நிலையில் வாக்குகள் அடிப்படையில் 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவதற்குரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியா 183 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தை கொண்டது.

இந்த தேர்தலில் அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்து வருபவர், 31 வயதான இளம் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ்தான். இவர், ஓ.வி.பி., என்றழைக்கப்படுகிற பழமைவாத மக்கள் கட்சியின் தலைவர் ஆவார்.

Sebastian Kurz Elected Austria First Young Europe President

மக்கள் கட்சியானது 31 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வென்று முன்னணியில் உள்ளது .

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களே வென்றுள்ளதால் அகதிகளுக்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கும் சுதந்திர கட்சியின் கூட்டணியை செபாஸ்டின் குர்ஸ் நாடலாம்.

இந்த வெற்றி குறித்து ஆதரவாளர்களிடம் பேசிய செபாஸ்டின் ” இது நாட்டில் மாற்றத்துக்கான நேரம். இந்த நாட்டை மாற்றுவதற்கு இன்று நமக்கு ஒரு வலுவான கட்டளை இடப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இதன் மூலம் செபாஸ்டியன் குர்ஸ்,ஐரோப்பிய நாடுகளில் மிக இளம் வயது தலைவர் என்ற சிறப்பை பெற முடியும் என்பது முக்கிய அம்சமாகும்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here