பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் விபத்து! தமிழக மாலுமிகள் நிலை?

0
134
Dubai Cargo Ship Sunk 10 Sailors Missing Philippines

(Dubai Cargo Ship Sunk 10 Sailors Missing Philippines)

பிலிப்பைன்ஸ் கடலில் சென்றுகொண்டிருந்த , துபாய் நாட்டின் ஸ்டெல்லார் ஓசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எமரால்டு ஸ்டார்’ என்ற சரக்கு கப்பல் மூழ்கியது.

ஹாங்காங் நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்ற இந்த கப்பலில் பயணம் செய்த தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன என்று தெரியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் பகுதி வழியாக சென்ற இந்த கப்பலில் 26 மாலுமிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென்று கடும் புயல் வீசியதில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

Dubai Cargo Ship Sunk 10 Sailors Missing Philippines

இந்த கப்பலில் பயணம் செய்த 26 மாலுமிகள் பாதுகாப்பு மிதப்பு உடை அணிந்து கடலில் குதித்தனர். அந்த வழியாக 2 கப்பல்களில் வந்தவர்கள், கடலில் தத்தளித்தவர்களில் 16 பேரை மீட்டனர். மேலும் 10 மாலுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.

காணாமல் போன மாலுமிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அடங்குவர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்கள் இந்த கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கப்பல் 33 ஆயிரத்து 205 டன் எடையுள்ள பொருட்களை ஏற்றிச்சென்ற சமயமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here