ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்-71 பேர் பலி!

0
154
Afghanistan Taliban Suicide Bombing Target Police Headquarters

(Afghanistan Taliban Suicide Bombing Target Police Headquarters)

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை , ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களை ஒடுக்குவதற்கு அமெரிக்க தனது படை எண்ணிக்கையை அங்கு அதிகரித்துள்ளதோடு , தொடர்ச்சியாக வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்தியா மாகாண தலைநகரான கார்டிசில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகம் உள்பட இரண்டு இடங்களில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

Afghanistan Taliban Suicide Bombing Target Police Headquarters

போலீஸ் பயிற்சி கட்டிடத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் , முதலில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்று பயிற்சி மைய சுவர் மீது மோதி உள்ளே நுழையும் வழியை ஏற்படுத்தி கொடுத்தான்.

பின்னர் அந்த வழியாக தீவிரவாதிகள் பயிற்சி மையத்தினுள் புகுந்து துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரமாக இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை தொடந்து நடந்தது.

தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல்களில் , 71 பேர் மரணமடைந்தும் 170-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

இது போன்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here