குர்திஷ் பகுதிகளை மீள கைப்பெற்றும் படை நடவடிக்கையில் ஈராக்!

0
164
Iraq Security Forces Capturing Kurdistan Provincial Areas

(Iraq Security Forces Capturing Kurdistan Provincial Areas)

கடந்த மாதம் , குர்து இன மக்கள் ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தினர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நினுவா மாகாணத்தில் உள்ள மொசூல் அணை உள்ளிட்ட பகுதிகளை குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் கைப்பற்றினர்.

இதனையடுத்து குர்து மக்கள் வாழும் மாகாணத்தை தனி மாகாணமாக அறிவிக்க நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு வாக்குகள் கிடைத்ததின் அடிப்படையில் , குர்திஸ்தான் தனி நாட்டு பிரகடனம் செய்யப்பட்டது.

இதனை நிராகரித்த ஈராக் , குர்து போராளிகள் வசமிருக்கும் பகுதிகளை கைப்பெற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Iraq Security Forces Capturing Kurdistan Provincial Areas

கடந்த திங்கட்கிழமை பை ஹசான் மற்றும் அவானா எண்ணெய் கிணறுகளை அரச படைகள் கைப்பற்றின. அதற்கும் முன்னதாக திங்களன்று, கிர்குக் பகுதியில் உள்ள முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் அங்குள்ள ஆளுநர் அலுவலகத்தையும் கைப்பற்றின.

குர்திஷ் பெஷ்மெர்கா படையினர் டியாலா மற்றும் நினுவா மாகாணங்களில் இருந்து பின்வாங்கியுள்ளதாக ஈராக் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கைபெற்றப்பட்ட பிரதேசங்களில் , ஈராக் தேசிய கொடியுடன் பறந்துகொண்டிருந்த குர்திஸ்தான் பிராந்தியத்தின் கொடியை அப்படைகள் அகற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் குர்திஸ்தான் தனி நாட்டு பிரகடனம் செல்லுபடியாகுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here