பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் பலி!

0
135
Pakistan Militant Leader Killed Afghanistan Drone Attack

(Pakistan Militant Leader Killed Afghanistan Drone Attack)

பாகிஸ்தான் நாட்டில் செயற்பட்டு வரும் முக்கிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒருவர் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் முக்கியமான பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஒமர் காலித் கொராசனி என்பவரே கொல்லப்பட்டவராவார்.

Pakistan Militant Leader Killed Afghanistan Drone Attack

குறித்த தீவிரவாதியின் தலைமையின் கீழ் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பு , பாகிஸ்தானுக்குள் நடந்த பல வெடிகுண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் ஒரு பூங்காவில் கிறிஸ்துவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியாகிய தாக்குதல் மற்றும் ஜமாத்-உல்-அஹ்ரர். குவெட்டாவில் உள்ள மருத்துவமனை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் போன்றவை இந்த அமைப்பினால் நடாத்தப்பட்டவை.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திவிட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கிக்கொள்ளும் தீவிரவாதிகளைக் குறிவைத்துத்தாக்கும்படி அமெரிக்காவை பாகிஸ்தான் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் , ஆளில்லா விமானத் தாக்குதல்களின் எண்ணிக்கையை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள இந்த தீவிரவாத தலைவருடன் மேலும் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here