சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

0
593
Pilots Perform Magic Passengers Flight Leads Suspend

(Pilots Perform Magic Passengers Flight Leads Suspend)

விமானங்களில் சாகசம் புரியும் விமானிகள் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் அதற்காக பயணிகள் விமானத்திலும் சாகசமா என்று கேட்கும் படி மிரட்டி இருக்குறார்கள் ஏர் பெர்லின் விமானிகள்.

விமானத்தின் கடைசி தொலைதூர பயணத்தினை முன்னிட்டு அதற்கு மரியாதை செலுத்துகிறோம் என்னும் பெயரில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏர் பெர்லின் விமான நிறுவனம், 144 விமானங்களில் 81 விமானங்களை லுஃப்தான்சா என்கின்ற விமான சேவை நிறுவனத்துக்கு வழங்குகிறது.

இந்நிலையில், ஏர் பெர்லின் நிறுவனத்தின் ஏ330 என்ற பயணிகள் விமானம் கடைசி தொலைதூர பயணமாக அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து ஜெர்மனியின் டுஸ்ஸெல்டார்ஃப் நகருக்கு வந்துள்ளது.

அந்த விமானம் தரையிறங்க அனுமதி கிடைத்ததையடுத்து கீழே வந்த விமானம், இடதுபக்கம் சாய்ந்தவாரே மறுபடியும் உயர பறந்துள்ளது.

Pilots Perform Magic Passengers Flight Leads Suspend

இதனால் விமான நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் வானில் பறந்த பிறகு மீண்டும் அந்த விமானம் தரையிறங்கியது. உடனடியாக அந்த விமானத்தில் இருந்தவர்கள் கீழே இறக்கப்பட்டனர்.

அதிர்ச்சி அடைந்த விமான நிலைய பொறுப்பதிகாரிகள் விமானிகளின் செய்கை பற்றி விசாரணை நடத்திய போது அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது ஏர் பெர்லின் நிறுவனத்தின் கடைசி நீண்ட தூர பயணம் என்பதால் அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக அவ்வாறு செய்தோம் என பதிலளித்துள்ளனர்.

விமானிகளின் பதிலை ஏற்றுக்கொள்ளாத ஏர் பெர்லின் நிர்வாகம் அந்த இரு விமானிகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

விமான சேவையில் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும், இந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாவம் சாகசம் செய்து மரியாதை செய்ய நினைத்த விமானிகளுக்கு சஸ்பென்ட் தான் பரிசாக கிடைத்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here