ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாம் மீது தலிபான் அதிரடி தாக்குதல்! 43 வீரர்கள் பலி!

0
122
Taliban Terrorists Attack Afghanistan Army Base 43 Soldiers Killed

(Taliban Terrorists Attack Afghanistan Army Base 43 Soldiers Killed)

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மிகவும் அதிகரித்துள்ளது.

தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு இராணுவத்தினருடன் இணைந்து உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்றாலும் நாட்டின் பல பாகங்களிலும் தலிபான்கள் நடாத்தி வரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இராணுவத்தினரை மட்டுமன்றி பல அப்பாவி பொதுமக்களையும் பலி வாங்கி வருகின்றது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட மைவான்ட் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் கொடுரமான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவ முகம் மீது முதலில் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் முகாமினுள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடாத்தி உள்ளனர்.

Taliban Terrorists Attack Afghanistan Army Base 43 Soldiers Killed

பல மணி நேரம் இடம்பெற்ற இந்த மோதலில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது. மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இராணுவத்தின் பதில் தாக்குதலில் 10-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தலிபன் தீவிரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த தீவிரவாத தாக்குதல், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான புகலிடமும், ஆதரவும் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு கிடைக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here