ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதல்களில் 60 பேர் பலி!

0
129
Afghanistan Suicide Bomb Attacks Killed 60 People

(Afghanistan Suicide Bomb Attacks Killed 60 People)

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இருவேறு ஷியா மசூதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் வரையில் உயிரிளந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது.

இந்நிலையில், வடமெற்கு ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்திற்கு உட்பட்ட தாவ்லினா மாவட்டத்தில் உள்ள மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

இது தவிர , தலைநகர் காபூலில் உள்ள இமாம் ஜமான் மசூதியில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி சுடுவதற்கு முன்பு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த 39க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

Afghanistan Suicide Bomb Attacks Killed 60 People

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்நாட்டில் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 176 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த தாக்குதல்களை ஐஎஸ் அமைப்பு நடத்தியிருக்கும் என ஐயம் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களில் சிக்கி மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here