ஒபாமாவின் காதல் கடிதங்கள் காட்சிக்கு வருகின்றது!

0
188
American Former President Obama Love Letters Exhibition

(American Former President Obama Love Letters Exhibition)

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்று தனது காலத்தை மகிழ்வுடன் குடும்பத்துடன் கழித்து வருகிறார்.

ஒபாமா தனது இளம் வயதில் கல்லூரியில் படித்த போது முதன் முறையாக அலெக்ஸ்சாண்ட்ரா என்ற பெண்ணை காதலித்தார்.

அப்போது கடந்த 1980-ம் ஆண்டுகளில் அவருக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளார்.

இவற்றில் பெரும்பாலான கடிதங்கள் 30 க்கும் அதிகமான பக்கங்களை கொண்டது.

அவற்றில் 9 கடிதங்கள் மட்டும் காதல் கடிதங்கள் ஆகும். அதில் அலெக்ஸ்சாண்ட்ராவை உருகி உருகி வர்ணித்து இருக்கிறார். அதன் மூலம் அவரின் தீவிர காதலை புரிந்து கொள்ள முடியும்.

இவை அனைத்தும் அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை ஒபாமா தனது குடும்பத்துடன் கலந்து பேசி வழங்கி இருக்கிறார்.

மேலும், இக்கடிதங்களில் தான் பட்ட பொருளாதார கஷ்டங்கள், கறுப்பினராக பிறந்ததால் பட்ட துயரங்கள், அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகள் என அனைத்தையும் எழுதியுள்ளார்.

இந்த கடிதங்களை ஆய்வு செய்து ஆய்வு கட்டுரை எழுத பலர் ஆர்வமாக உள்ளமை முக்கிய விடயமாகும்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here