இந்திய விமானப்படைக்கு ஆளில்லாத தாக்குதல் விமானங்கள்!

0
134
America Announce Give Armed Drones Indian Air Force

(America Announce Give Armed Drones Indian Air Force)

இந்திய விமானப்படைக்கு ஆளில்லாமல் தாக்குதல் நடாத்தும் டிரோன் வகை விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.

அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட ஆயுதங்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகள் தரப்பிலும் நடைபெற்றுவருகின்றது.

ஜனாதிபதி டிரம்ப் அழைப்பின் பேரில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்புடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய கடற்படையின் கடலோர கண்காணிப்புக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் பொருத்தப்படாத 22 கார்டியன் ரக அதிநவீன ஆளில்லாத விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

இதேபோல் விமானப்படையின் ஆயுத தாக்குதலுக்கு உதவிடும் விதமாக 100 சி.அவெஞ்சர் ரக ஆளில்லாத விமானங்களை வழங்கும்படி இந்திய விமானப்படை அமெரிக்காவை கேட்டுக் கொண்டு இருந்தது.

America Announce Give Armed Drones Indian Air Force

1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள இந்த ஆளில்லா தாக்குதல் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்தியா தனது விமானப்படையில் நவீன தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here