அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம்!

0
129
American Foreign Minister Rex Tillerson Visits Afghanistan

(American Foreign Minister Rex Tillerson Visits Afghanistan)

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அறிவிக்கப்படாத திடீர் விஜயம் ஒன்றை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மேற்கொண்டுள்ளார்.

நாளை முதல் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் , இன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் வந்தடைந்தார்.

American Foreign Minister Rex Tillerson Visits Afghanistan

காபுல் நகரின் தெற்கே உள்ள பக்ராம் விமானப்படை தளத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசிய ரெக்ஸ் டில்லர்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி நிலவவும், தீவிரவாதத்தை வேரறுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்திவரும் தலிபான்கள் , ஆயுத பலத்தால் அமெரிக்காவை வெல்ல முடியாது என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம் என அந்நாட்டு அரசுக்கு உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் , வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் முதன்முறையாக தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here