சிரியாவில் ஐ.எஸ் படைகளின் அட்டகாசம் அம்பலம்! அநியாயமாக 116 பேர் படுகொலை!

0
202
Syria ISIS Terrorists Killed 116 Innocent Civilians Last War

(Syria ISIS Terrorists Killed 116 Innocent Civilians Last War )

சிரியாவில் பெரும்பாலான பகுதிகள் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் ஐ.எஸ் படைகளிடம் இருந்து மீட்கப்பட்டதன் பின்னர், ஆங்காங்கே சிறு சிறு மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.

டெய்ர்-அல்-ஸோர் மாகாணத்தில், யூப்ரட்ட்எஸ் ஆற்றுப்பகுதியில் உள்ள முக்கிய நகரமான அல்-மயாடின் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து அரசுப் படைகள் கடந்த மாதம் மீட்டன.

இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஓமர் பெட்ரோல் வயலை அமெரிக்க படைகள் துணையுடன் சிரியா இராணுவம் கைப்பற்றியுள்ளது.

சிரியாவின் மிகப்பெரிய அல்-ஓமர் பெட்ரோல் வயலை ஐ.எஸ் வசமிருந்து அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளமை தீவிரவாதிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சிரியாவில் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது கடந்த 20 நாட்களில் பொதுமக்களில் 116 பேரை அரசின் உளவாளிகள் என சந்தேகித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

Syria ISIS Terrorists Killed 116 Innocent Civilians Last War

இத்தகவலை , அங்கு போர் நிலைமைகளை பார்வையிட்டுவரும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதே போல பல கொலைகள் அங்கு இடம்பெற்றிருக்ககூடும் என பலத்த அச்சம் அங்கு நிலவி வருகின்றது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here