திருட்டு வழக்கில் சிக்கிய அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் நடுவர்!

0
145
Former Cricket Test Match Umpire Darrell Hair Steals Money

(Former Cricket Test Match Umpire Darrell Hair Steals Money)

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் ஒருவர் திருட்டு வழக்கு ஒன்றில் மாட்டியுள்ளார்.

டேரல் ஹேர் என்னும் 65 வயதுடைய இந்த கிரிக்கெட் நடுவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

இவர் தான் , இலங்கையை சேர்ந்த பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரன் பந்து வீச்சை பிழை என கூறி சர்ச்சையை கிளப்பியவர்.

Former Cricket Test Match Umpire Darrell Hair Steals Money

அதுமட்டுமல்லாமல் ‘நோ-பால் என்று அறிவித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதன்பின் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை தொடர்ந்து நடுவராக பணியாற்றினார்.

அதேபோல் 2006-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறி பாகிஸ்தான் அணிக்கு தடைவிதித்தார்.

இதனால் சர்ச்சைக்குரிய நடுவர் என்று பெயர் பெற்ற இவர் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு மதுபானக்கடையில் வேலை செய்தார்.

அந்தக் கடையில் வேலைப்பார்த்த போது பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றத்தை டேரல் ஹேர் ஒப்புக் கொண்டார்.

இதனால் அவருக்கு 18 மாத கால நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வழங்கும்படி ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here