நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவாகினார்!

0
159
Jacinda Ardern Elected New Zealand New Prime Minister

(Jacinda Ardern Elected New Zealand New Prime Minister)

நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதன் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அங்கு பெரும் இழுபறி நிலவியது.

தேர்தல் வாக்கெடுப்பு படி , ஆளும் தேசிய கட்சி 56 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 46 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிறிய கட்சியான நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி 9 இடங்களிலும், பசுமைக்கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் தேசிய கட்சியும், தொழிலாளர் கட்சியும் ஈடுபட்டன.

பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி உருவெடுத்தது. அக்கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், தீவிர ஆலோசனைக்குப் பிறகு, ஜெசிந்தா ஆண்டர்னின் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

இதன்மூலம், 10 ஆண்டு காலமாக நீடித்த தேசிய கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 37 வயதே நிரம்பிய ஜெசிந்தா ஆண்டர்ன் பிரதமராக நாளை பதவியேற்க உள்ளார். துணை பிரதமர் பதவியை வின்ஸ்டன் பீட்டர்சுக்கு வழங்க ஜெசிந்தா முன்வந்தார்.

Jacinda Ardern Elected New Zealand New Prime Minister

இந்நிலையில், கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அப்போது துணை பிரதமர் பதவிக்கு வின்ஸ்டன் பீட்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். மேலும், அமைச்சர்கள் விபரமும் அறிவிக்கப்பட்டது.

குழந்தை வறுமை குறைப்பு, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை ஆகிய அமைச்சுக்களை ஜெசிந்தாவே பொறுபேற்றுள்ளார்.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here