எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

0
723
Australia Pet Dog Bite Killed Owner Horrific Dog Attack

(Australia Pet Dog Bite Killed Owner Horrific Dog Attack)

வளர்ப்பு பிராணிகளை அளவுக்கு அதிகமாக செல்லமாக வைத்திருக்கும் நபர்களுக்கு சிலவேளைகளில் அவர்களின் செல்ல பிராணிகளே எமனாக மாறும் சம்பவங்கள் நடப்பதுண்டு.

வளர்ப்பு பிராணிகளிடத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் விலங்குகளிடம் காட்டும் அன்பு தீமையில் கூட முடியலாம் என்றும் உணர்த்தியிருக்கிறது ஒரு அவுஸ்திரேலிய வளர்ப்பு நாய்.

அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவர் ஆசையோடு வளர்த்த நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கான்பரா நகரைச் சேர்ந்த தானியா எனும் நாற்பது வயதுடைய பெண் சிம்பா எனும் பெயெருடைய நாய் ஒன்றினை மிகுந்த செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

Tania Klemke’s dog Simba killed her in a vicious attack on Wednesday morning. Picture: Nine News.

நாயின் எசமானியின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்த சமயம் , குறித்த நாய் அவரை வெறித்தனமாக கடித்துள்ளது. அவரை நாயின் கடியில் இருந்து காப்பாற்ற முயன்ற எசமானி, செல்லப்பிராணியை பிடிக்க முயன்றபோது அது சட்டென்று அந்த பெண் நோக்கி திரும்பி அவரையும் மோசமாகக் கடித்துக்குதறியது.

நாயின் தாக்குதலை அவதானித்த அயல்வீட்டார் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வெறி நாயின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் அதனை சுட்டுக்கொன்றனர். எனினும் நாயினால் குதறப்பட்ட பெண் இரத்தப்போக்கு காரணமாக உயிரை விட்டார்.

A women has died and a man seriously injured after a fatal dog attack in Watson, Canberra. Picture Kym Smith

குறித்த பெண் அந்த நாயுடன் மிகவும் அன்பாக பழகியவர் என்றும் அவர் தனது உண்மையான நண்பனாக சிம்பா எனும் அந்த நாயையே நம்பியதாகவும் அவரின் மகன் தெரிவித்துள்ளார்.

அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த கொடூர நாய்!

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளதால் , மிகவும் ஆபத்தான வளர்ப்பு நாய்கள் மீது எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அவுஸ்திரேலிய போலீசார் மக்களை வேண்டியுள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here