முதலாவது சுனாமியால் இறந்தவரின் மண்டையோடு பப்புவாநியுகினியில் கண்டுபிடிப்பு!

0
166
Oldest Tsunami Victim Skull Found Papua New Guinea

(Oldest Tsunami Victim Skull Found Papua New Guinea)

1929 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய கண்டத்தில் உள்ள சிறிய தீவான பப்புவா நியூகினியில் உள்ள ஐடேப் என்ற நகர் அருகே ஒரு மண்டையோடு கண்டு பிடிக்கப்பட்டது. நவீனகால மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் ஹோமோ எரக்டஸ் இனத்தின் சான்றுகளை இது கொண்டுள்ளது.

ஆனால் தற்போது இந்த மண்டையோட்டை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் இறந்தவரின் மண்டையோடு இதுவென்று கூறியுள்ளனர்.

மண்டையோடு கிடைத்த பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மண்ணையும், அந்த பகுதிக்கு அருகே 1998-ஆம் ஆண்டு சுனாமியால் சின்னாபின்னமான பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணையும் கொண்டு ஒப்பிட்டு பார்த்த போதே இந்த புதிய தகவல் கிடைத்துள்ளது.

Oldest Tsunami Victim Skull Found Papua New Guinea

மணல் படிமங்களின் அளவு மற்றும் கலவை குறித்த இந்த ஆய்வு , நீண்ட நாட்களுக்குமுன் பலியான இந்த மண்டையோடுக்கு சொந்தமான மனிதர் உலகில் சுனாமியால் பலியான பழமையான நபர் என முடிவு செய்ய வைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் சுனாமியை எதிர்கொண்டு வந்துள்ளார்கள் என்பது வண்டல் மண்ணிலிருந்து கிடைத்த புவியியல் ஒற்றுமைகள் காட்டியதாக நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் கோஃப் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here