தீவிரவாதம் தொடர்பில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

0
192
American Foreign Minister Warns Pakistan Eliminate Terrorism

(American Foreign Minister Warns Pakistan Eliminate Terrorism)

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், சமீபத்தில் கட்டார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

நாடு திரும்பிய பின்னர், தெற்காசியா தொடர்பான அமெரிக்காவின் செயற்பாட்டுத்திட்டம் பற்றி வாஷிங்டன் நகரில் ஆலோசனை நடத்தியிருந்தார்.

அந்த ஆலோசனையில், பாகிஸ்தான் பயணத்தின்போது அங்குள்ள தீவிரவாதிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

American Foreign Minister Warns Pakistan Eliminate Terrorism

அதாவது, ” தெற்காசிய பிராந்தியத்தில் தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களது முதல் நோக்கம்; அதை நீங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்; வேறு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை; இறையாண்மை மிகுந்த நாடு என்ற வகையில் என்ன செய்ய வேண்டும்? என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ள வேண்டும். என அவர் பாகிஸ்தான் அரசை கோரியுள்ளார்.

பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயற்பட்டு , எமது நடவடிக்கைக்கு துணையாக இல்லாவிட்டால், எங்கள் வழியில் நாங்கள் தீவிரவாதிகளை ஒழிப்போம் ” என பாகிஸ்தானை ரெக்ஸ் டில்லர்சன் அறிவுறுத்தியாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here