கட்டலோனியா தனி நாட்டு கோரிக்கைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

0
154
Barcelona Street Protest Against Catalonia independence

(Barcelona Street Protest Against Catalonia independence)

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கட்டலோனியா தனிநாடாக பிரிவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தது.

அதற்கு 90 சதவிகித மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனிநாடு பிரகடனம் செய்தது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து சுதந்திர கட்டலோனியா பிறந்து விட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

தனி நாட்டு பிரகடனம் செய்யப்பட்டமையால் , அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே கட்டலோனியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஸ்பெயின் அறிவித்தது.

ஸ்பெயினின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கட்டலோனியா நிர்வாகம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டலோனியா சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்பெயினுக்கு ஆதரவாகவும் கட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

Barcelona Street Protest Against Catalonia independence

சுமார் மூன்று லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் , ஸ்பெயின், ஐரோப்பிய யூனியன் மற்றும் கட்டலோனியா கொடிகளை கையில் ஏந்தியவாறு ஸ்பெயினுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here