சோமாலியா தற்கொலை குண்டுத்தாக்குதலில் 30 பேர் பலி!

0
199
Somalia Al Shabaab Suicide Bomb Attack Killed 18 Civilians

(Somalia Al Shabaab Suicide Bomb Attack Killed 18 Civilians)

சோமாலியா நாட்டில் இயங்கி வரும் அல் ஷபாப் தீவிரவாத குழு அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதலை நிகழ்த்தி வருகின்றது.

அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் சோமாலியாவின் பல பகுதிகளில் இயங்கிவருகின்றனர்.

சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

இந்த தீவிரவாதிகள், உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீதும் , மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையிர் மீதும் அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Somalia Al Shabaab Suicide Bomb Attack Killed 18 Civilians

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள ஒரு பிரபல உணவகம் மீது இன்று அல் ஷபாப் தீவிரவாதிகள் இரண்டு கார் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

பின்னர், மேலும் பல தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த மோதலில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் , பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here