நைஜீரியா மற்றும் கேமரூனில் தீவிரவாத தாக்குதலில் 20 பேர் பலி!

0
131
Boko Haram Attacks Cameroon Nigeria Killed 20 People

(Boko Haram Attacks Cameroon Nigeria Killed 20 People)

நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளில் இயங்கி வரும் மிகவும் ஆபத்தான போகோ ஹரம் தீவிரவாதிகள் அங்கு தீவிரவாத தாக்குதலைகளை மேற்கொண்டுள்ளனர்.

கேமரூன் மற்றும் நைஜீரிய நாட்டின் அரசுகளுக்கு எதிராக எல்லைப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வரும் போகோ ஹரம் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பன்னாட்டு ராணுவ வீரர்கள் அடங்கிய படை போரிட்டு வருகின்றது.

Boko Haram Attacks Cameroon Nigeria Killed 20 People

இந்நிலையில், வடக்கு கேமரூனின் கொலொஃபடா பகுதியில் உள்ள கவுடேரி கிராமத்தில் சில போக்கோ ஹரம் தீவிராவதிகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 15 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது முன்னர் நடத்தப்பட்ட கைது சம்பவத்திற்கு பழிவாங்குவதற்காக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நைஜீரியா நாட்டின் போர்னோ மாநில தலைநகரான மைடுகுரி நகரின் மத்திய பகுதியில் உள்ள அஜ்ரி யாலா பகுதியில் பிரபலமான மசூதி ஒன்றுள்ளது. நேற்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) இந்த மசூதிக்குள் ஒரு தீவிரவாதி உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு புகுந்துள்ளான்.

தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென்று வெடிக்க செய்ததில் ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here