இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் தாக்குதல் ஏழு பேர் பலி!

0
126
Israel Strikes Gaza Tunnel Seven Palestinians killed

(Israel Strikes Gaza Tunnel Seven Palestinians killed)

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட எல்லைப்பகுதியில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அவ்வப்போது தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் இராணுவத்தினரை குறிவைத்தும் ஹமாஸ் போராளிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை அறிந்ததே.

இந்நிலையில், காசா பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையை அழிப்பதற்காக இஸ்ரேல் இராணுவத்தினர் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Israel Strikes Gaza Tunnel Seven Palestinians killed

இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் ஒன்பது பேர் காயம்டைந்ததாகவும் கூறப்படுகிறது.

அழிக்கப்பட்ட சுரங்கப்பாதை இஸ்ரேல் எல்லைக்குள் இருப்பதாக அந்நாட்டு இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலில் மத்திய காசா பகுதியை சேர்ந்த ஒரு முக்கிய ஹமாஸ் அமைப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.பாலஸ்தீனில் அமைதியை சீர்க்குலைப்பதற்காக இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்கப்பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பொது மக்கள் இந்த தாக்குதலில் மரணமடைந்தனர். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இரண்டு ஹமாஸ் வீரர்கள் வீரமரணமடைந்தனர் எனவும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here