குவைத் நாட்டின் பிரதமர் திடீர் இராஜினாமா!

0
175
Kuwaiti Emir Accepts Prime Minister Sheikh Jaber Resignation

(Kuwaiti Emir Accepts Prime Minister Sheikh Jaber Resignation)

குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக் அல் சபா நேற்று திடீரென்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இவரின் ராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

Kuwaiti Emir Accepts Prime Minister Sheikh Jaber Resignation

இதனையடுத்து , மந்திரிசபை கலைக்கப்பட்ட நிலையில் புதிய அரசு அமையும் வரையில் அடுத்த தேசிய சட்டமன்ற கூட்டம் நடைபெறாது என சபாநாயகர் மர்சூக் அல் கானிம் கூறியுள்ளார்.

புதிய அரசு கடந்த பிப்ரவரி மாதம்தான் மீள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை நடந்த தேசிய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய சபாநாயகர் மர்சூக் அல் கானிம் நடப்பு அரசு கலைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

தகவல் தொடர்பு அமைச்சர் முகம்மது அல் சபா பேசும்போது, “சட்டம் இயற்றக்கூடிய பணியில் உள்ளவர்கள் பட்ஜெட் மற்றும் சட்ட விதிகளை மீறி நிர்வாகத்தை சரிவர கவனிக்காததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

வடகொரிய அதிபரின் சாகசம்! வைரல் காணொளி!

கழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்? ஜெர்மனியில் வினோத வழக்கு!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here