அணு குண்டு சோதனையால் வடகொரியாவில் 200 போ் பலி!

0
129
North Korea Nuclear Tunnel COLLAPSES Killed 200 People

(North Korea Nuclear Tunnel COLLAPSES Killed 200 People)

சமீப காலமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா இந்த சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

கடந்த 2006 ம் ஆண்டு அக்டோபரில் வடகொரியா முதல்முறையாக அணு ஆயுத சோதனையை நடத்தி இருந்தது. அதன்பின் 2009, 2013, 2016 ஜனவரி, செப்டம்பரில் அடுத்தடுத்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, 6 வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை அதாவது நிலத்தடி அணுகுண்டு வெடிப்பு சோதனை ஒன்றை கடந்த செப்டம்பர் 3 ம் திகதி வடகொரியா நடத்தியது.

கடந்த செப்டெம்பர் மாதம் வட கொரிய பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதை நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள் கண்டறிந்த சில மணி நேரத்தில், தங்களின் ஆறாவது அணு ஆயுத சோதனை வெற்றியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்திருந்தது.

அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்திருந்தது.

இதற்காக வட கொரியா பயன்படுத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு 100 கிலோ டொன் எடையைக் கொண்டது; 1945-ம் ஆண்டு ஹிரோசிமாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது பயன்படுத்திய குண்டை விட இது 7 மடங்கு அதிக சக்திவாய்ந்தது.

இதனால் வடகொரியாவின் ‘பியாங்யாங்கி’ அணு ஆயுத பரிசோதனை கூடமே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ச்சியாக வடகொரியா அணு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளை சோதனை செய்ததன் காரணமாகவே பரிசோதனை கூடம் பலவீனமாகி உள்ளது.

 The Punggye-ri test site in North Korea is carved deep into Mount Mantap, as these file images show

ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து முடித்த பின் ‘பியாங்யாங்கி’ அணு ஆயுத சோதனை மையத்தில் உள்ள சுரங்கம் இடிந்து விபத்து நேர்ந்துள்ளது. இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வடகொரியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அணு ஆயுத பரிசோதனை மையத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கமே இடிந்து விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 10ம் திகதி இடம்பெற்ற போதும் இன்றைய தினமே செய்தி வெளியாகியுள்ளது.

விபத்து நேரிட்ட சந்தர்ப்பத்தில் 100 தொழிலாளர்களே பலியாகியுள்ளனர். தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றபோது மீண்டும் விபத்து நேரிட்டு உள்ளது. அதாவது மீட்புப் பணிகள் நடைபெற்ற போதும் மீண்டும் ஒருமுறை சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மேலும் 100 போ் பலியாகியுள்ளனர்.

மொத்தமாக இச்சம்பவத்தில், அதாவது வடகொரியாவில் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 போ் பலியாகி உள்ளனர் என ஜப்பான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் அசாஹி செய்தியில் தெரிவித்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here