கருங்கடலில் துருக்கி நாட்டு சரக்கு கப்பல் மூழ்கியது! 11 பேர் நிலை?

0
189
Turkey Cargo Ship Sinks Black Sea 10 Crew Missing

(Turkey Cargo Ship Sinks Black Sea 10 Crew Missing)

துருக்கி நாட்டு சரக்கு கப்பல் ஒன்று இஸ்தான்புல் அருகே உள்ள ஆசியப் பகுதியில் சென்று கொண்டிருந்த வேளை கருங்கடலில் மூழ்கியுள்ளது.

துருக்கி நாட்டுக்கு சொந்தமான பிலால் பால் என்ற சரக்கு கப்பல் அந்நாட்டின் வடமேற்கில் உள்ள புர்சா மாகாணத்தில் இருந்து வடக்கே உள்ள ஜோங்குல்டாக் மாகாணத்துக்கு கருங்கடல் வழியாக தாது இரும்பு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.

Image result for turkey cargo ship sank in black sea

திடிரென நேற்றிரவு அந்த கப்பல் நடுக்கடலில் மூழ்கியதாக துருக்கி பிரதமர் பினாலி இல்ட்ரிம் அறிவித்துள்ளார்.

இந்த கப்பல் விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் இந்த கப்பலில் பயணம் செய்த 11 மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாமையால் அங்கு பெரும் அச்சம் நிலவுகிறது.

Turkey Cargo Ship Sinks Black Sea 10 Crew Missing

அவர்களை தேடும் பணியில் மூன்று படகுகளும் ஒரு ஹெலிகாப்டரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காலியாக காணப்படும் அவசர உதவி படகுகளும், சில மிதக்கும் நீச்சல் உடைகளும் கப்பல் மூழ்கிய பகுதியில் காணப்படுவதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here