ஆசியாவுக்கான சுற்றுப்பயணத்தில் அதிபர் டிரம்ப்!

0
147
America President Trump Long Visits Asian Countries

(America President Trump Long Visits Asian Countries)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது ஆசிய நாடுகளுக்கான பயணத்தை நேற்று ஆரம்பித்தார்.

டிரம்ப் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். 1991-1992 ஆண்டு களில் அமெரிக்க ஜனாதிபதி யாக இருந்த ஜார்ஜ் எச். டபிள்யு. புஷ்தான் ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

வருக்கு பின் இப்போது 25 ஆண்டுகளுக்கு பின்னர் டிரம்ப், ஆசிய நாடுகளுக்கு நீண்ட சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக அவர் தனது மனைவி மெலனியா டிரம்புடன் நேற்று முன்தினம் ஹவாய் தீவுக்கு சென்றார்.

அங்கு அவர் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் அரிசோனா நினைவு சின்னத்துக்கு படகில் சென்றார். அங்கு அவரும் அவரது மனைவியும், வெள்ளைப்பூக்களை தண்ணீரில் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து அவர்கள் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

America President Trump Long Visits Asian Countries

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, 7-ந் தேதி டிரம்ப் தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு செல்கிறார். அங்கு அந்த நாட்டின் அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அதன் பின்னர் 8 ஆம் திகதி , சீன தலைநகர் பீஜிங் செல்கிற டிரம்ப், அங்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுவதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

10-ஆம் திகதி டிரம்ப் மற்றும் அவரின் மனைவி வியட்நாம் போகிறார்கள். அங்கு டனாங் நகரில் அபெக் என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்துகொண்டு பேசுகிறார்.

பின்னர் 12-ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு விஜயம் செய்யும் டிரம்ப் , ஆசியன் நாடுகள் அமைப்பின் 50-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறுகிற இரவு விருந்தில் கலந்துகொள்கிறார்.

இந்த நீண்ட சுற்றுப்பயணத்தின் நோக்கம் , வடகொரியா அணு ஆயுத திட்டங்களை கைவிட வைப்பதில் ஆசிய நாடுகள் ஆற்ற வேண்டிய பங்கு பணிகள் குறித்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே என கூறப்பட்டுள்ளது.

டிரம்பின் ஆசிய பயணத்தின்போது, வடகொரியா விவகாரத்தில் தீர்வு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here