டெக்சாஸ் மாகாண வழிபாட்டுதலத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 27 பேர் பலி!

0
187
America Texas Church Attack Gunman Killed 27 People

(America Texas Church Attack Gunman Killed 27 People)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாப்டிஸ்ட் கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில்  காலை ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார்.

America Texas Church Attack Gunman Killed 27 People

இதனால் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும், 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Image result for texas Church attack

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை சுட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பலத்த பதற்றம் நிலவுவதுடன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here