கட்டலோனியா தலைவர் போலீசில் சரண்!

0
146
Catalan Leader Carles Puigdemont Surrender Belgium Police

(Catalan Leader Carles Puigdemont Surrender Belgium Police)

ஸ்பெயின் நாட்டில் சுயாட்சி உரிமையுடன் பங்கு வகிக்கும் மாகாணம் கட்டலோனியா, தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த மாதம் 1-ம் தேதி நடந்தது. இதில் கட்டலோனியா தனிநாடாக பிரிந்து செல்வதற்கு 90 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது.

சுதந்திர பிரகடனம் செய்த சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, அதனை ஸ்பெயின் மத்திய அரசின் கீழ் கொண்டுவர அந்நாட்டு பிரதமர் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் உள்ளிட்ட 5 பேர் மீது ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Catalan Leader Carles Puigdemont Surrender Belgium Police

தலைவர் பூட்ஜியமோண்ட் உட்பட மேலும் 4 பேர் விசாரணைக்கு சமுகமளிக்காத நிலையில் அவர்களை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் , ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவருடைய ஆலோசகர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் பெல்ஜியம் போலீசில் சரணடைந்துள்ளனர் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான விசாரணைக்கு பிறகே நீதிபதி அவர்களை சிறையில் அடைப்பது அல்லது விடுவிக்கப்படுவது குறித்து உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here