சிரியா கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 75 பேர் பலி!

0
172
Syria ISIS Terrorists Car Bomb Blast Killed 75 Civilians

(Syria ISIS Terrorists Car Bomb Blast Killed 75 Civilians)

சிரியாவில் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பல பொதுமக்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் உலக நாடுகள் சிரியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் கிழக்கு டேர் எஸ்ஸர் நகரில் புலம் பெயர்ந்த பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.

Syria ISIS Terrorists Car Bomb Blast Killed 75 Civilians

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை இலக்கு வைத்து இது போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here